தமிழ்நாடு

எதிர்க்கட்சியினரை ஏன் இவ்வளவு நேரம் பேச அனுமதித்தீர்கள் என முதல்வர் கேட்டதில்லை - சபாநாயகர்

Published On 2025-03-17 13:08 IST   |   Update On 2025-03-17 13:08:00 IST
  • அரசு ஒரே நாளில் 2 அல்லது 3 மானியக்கோரிக்கை நடத்துவதாக குற்றச்சாட்டுகள் வைத்தீர்கள்.
  • எதிர்க்கட்சியினரை ஏன் இவ்வளவு நேரம் பேச அனுமதித்தீர்கள் என முதல்வர் இதுவரை என்னிடம் கேட்டதில்லை.

சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

பேரவையில் நடந்த குரல் வாக்கெடுப்பிலும் டிவிஷன் முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் அ.தி.மு.க. கொண்டுவந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 63 பேர் ஆதரவாக வாக்களித்தனர். அ.தி.மு.க. கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக 154 பேர் வாக்களித்த நிலையில் தீர்மானம் தோல்வி அடைந்தது.

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அப்பாவு அமர்ந்தார்.

சபாநாயகர் இருக்கையில் மீண்டும் அப்பாவு அமர்ந்தபோது சட்டசபை உறுப்பினர்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து சபாநாயகர் அப்பாவு உரையாற்றினார். உரையில் அவர் கூறியதாவது:

* எதிர்க்கட்சி தலைவர் உட்பட தோழமை கட்சி தலைவர்கள் பேசிய அனைத்தையும் நான் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்.

* ஒரு சில தவறு நடந்திருந்தால் நானே திருத்தி இருப்பேன். அல்லது முதல்வரால் திருத்தப்பட்டிருப்பேன்.

* அரசு ஒரே நாளில் 2 அல்லது 3 மானியக்கோரிக்கை நடத்துவதாக குற்றச்சாட்டுகள் வைத்தீர்கள்.

* அ.தி.மு.க. ஆட்சியில் 30-க்கும் மேற்பட்ட துறைகளின் மானிய கோரிக்கைகளை ஒரே நாளில் நடத்தியதும் நினைவு கூர்கிறேன்.

* எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதிக்கவில்லை என கூறினார். அவர் 259 நிமிடம் பேசி உள்ளார்.

* எதிர்க்கட்சியினரை ஏன் இவ்வளவு நேரம் பேச அனுமதித்தீர்கள் என முதல்வர் இதுவரை என்னிடம் கேட்டதில்லை.

* ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசுவதற்கு ஆளுங்கட்சியினருக்கு 25, எதிர்க்கட்சியினருக்கு 49 சதவீதம் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News