மாணவிக்கு பாலியல் தொல்லை.. மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலருக்கு தர்மஅடி
- மாணவியிடம் ரூ. 500 கொடுத்து மோட்டார்சைக்கிளில் வருமாறு கூறியுள்ளார்.
- உதவி ஜெயிலர் அடி வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலாராக குருசாமி பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு விசாரணை கைதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கத்தின் மூலம் அவரது மகள் மற்றும் பேத்தியுடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த சிறைவாசியின் பேத்தியை தான் வசிக்கும் இடத்திற்கு தனியாக அழைத்ததாக கூறப்படுகிறது. இதனை தனது குடும்பத்தாரிடம் மாணவி கூறியுள்ளார். உடனே மாணவியை அனுப்பி வைத்துவிட்டு குடும்பத்தார் மறைவாக நின்று நோட்டமிட்டுள்ளனர்.
அப்போது அந்த இடத்திற்கு வந்த உதவி ஜெயிலர், மாணவியிடம் ரூ. 500 கொடுத்து மோட்டார்சைக்கிளில் வருமாறு கூறியுள்ளார். உடனே அந்த மாணவி கூச்சலிட்டுள்ளார்.
மாணவி கூச்சலிட்டத்தை அடுத்து அருகிலிருந்த மாணவியின் சித்தி உதவி ஜெயிலருக்கு தர்ம அடி கொடுத்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் குருசாமி மற்றும் மாணவியின் குடும்பத்தாரை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உதவி ஜெயிலர் அடி வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.