தமிழ்த்தாயின் தவப்புதல்வன் அண்ணா - எடப்பாடி பழனிசாமி புகழாரம்
- எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை
- தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த தமிழ்த் தாயின் தவப்புதல்வர்Anna's memorial day
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு நாளை யொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
அவருடன் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இதில் முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், முன்னாள் எம்.பி. ஜெயவர்தன், வழக்கறிஞர், ஆ.பழனி, நிர்மலா பெரியசாமி, டி.கே.எம்.சின்னையா, மாதவரம் மூர்த்தி, கமலக் கண்ணன், கே.பி.கந்தன், தி.நகர், சத்யா, ராஜேஷ், பாலகங்கா உள்பட ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.
இதுகுறித்து சமூக வலை தளபக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த சுயமரியாதை சுடரொளி, தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த தமிழ்த் தாயின் தவப்புதல்வர்; திராவிட இயக்கத்தின் பிதாமகன், மேடைதோறும் தமிழ் பொழிந்த காவிய மேகம்! இருள்சூழ் தமிழ்வானுக்கு
காஞ்சி வழங்கிய ஒளி வெள்ளி! அரசியல் பகை வரும் அண்ணாந்து வியக்கும்படி அறிவாற்றல் சிகரமென அதிசயமாய் உயர்ந்த, 'நம் இயக்கத்தின் கொள்கைச் சுடர்' பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவு நாளில், அவர்தம் உயரியக் கொள்கைகளைப் பின்பற்றி அவர் காட்டிய அறவழியில் பயணிக்க உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.