தமிழ்நாடு

மாணவி வன்கொடுமை - போராட்டம் - பா.ஜ.க.-வினர் கைது

Published On 2024-12-26 06:13 GMT   |   Update On 2024-12-26 06:13 GMT
  • தமிழக பா.ஜ.க. சார்பில் இன்று நடைபெற இருந்த வாஜ்பாய் பிறந்தநாள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

சென்னை:

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடூரத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த நிர்வாகிகளுக்கு பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தியது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுக்கு பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தியதின் பேரில் தமிழக பா.ஜ.க. சார்பில் இன்று நடைபெற இருந்த வாஜ்பாய் பிறந்தநாள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தமிழக பா.ஜ.க.. சார்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்க நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்வதை கண்டித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் ஒரு பெண் பாதிக்கப்பட்டு இருக்கிறார். ஒரு பெண் மட்டுமல்ல தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதற்கு போராடி தான் வருவேன். அதாவது போராட்டத்திற்கு இங்க வந்த போலீசார் அங்கு பாதுகாப்பு கொடுத்து இருக்கலாம். பாதுகாப்பு கொடுத்து இருந்தால் பெண் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டாங்களே. இது என்ன அடக்குமுறையா... நாங்கள் எல்லாம் தீவிரவாதியா? என்றார். 



Tags:    

Similar News