தமிழ்நாடு

அண்ணாமலையை போல் சாட்டையால் அடித்து கொண்ட பா.ஜ.க நிர்வாகிக்கு பலத்த காயம்- மயங்கி கீழே விழுந்தார்

Published On 2024-12-28 06:16 GMT   |   Update On 2024-12-28 06:16 GMT
  • சாட்டையால் அடிப்பதை பார்த்ததும் அப்பகுதியை சேர்ந்த மக்களும், பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டு விட்டனர்.
  • வீட்டிற்குள் சென்ற சிறிது நேரத்திலேயே, ஜெய்ஹிந்த் முருகேசுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

சூலூர்:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று கோவையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனக்குத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார்.

இதேபோன்று, சூலூர் அருகே உள்ள ஊஞ்சபாளையத்தை சேர்ந்த கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க. முன்னாள் பொதுச்செயலாளர் ஜெய்ஹிந்த் முருகேஷ்(வயது48) என்பவரும் சென்னை சம்பவத்தை கண்டித்து, தனது வீட்டின் முன்பு சாட்டையால் அடித்து கொண்டார்.

இவர் சாட்டையால் அடிப்பதை பார்த்ததும் அப்பகுதியை சேர்ந்த மக்களும், பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டு விட்டனர்.

அவர்கள் வேண்டாம் என்று கூறியும், அவர் தொடர்ந்து சாட்டையால் அடித்து கொண்டார். இவ்வாறாக அவர் 9 முறை தன்னைத் தானே சாட்டையால் அடித்து கொண்டார்.

அவர் சாட்டையால் அடித்தபோது, அங்கு திரண்டு இருந்த பா.ஜ.கவினர் கோஷங்களை எழுப்பினர். சாட்டையால் அடித்து கொண்டதால் அவருக்கு உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டது. இருப்பினும் வலியை பொறுத்து கொண்டு அவர் வீட்டிற்குள் சென்றார்.

வீட்டிற்குள் சென்ற சிறிது நேரத்திலேயே, ஜெய்ஹிந்த் முருகேசுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. திடீரென வீட்டிற்குள் மயங்கி விழுந்தார். இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு சூலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அதன்பின்னர் இரவில் அவர் வீடு திரும்பினார். இந்த சம்பவத்தால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News