தமிழ்நாடு
ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்கும் வேட்டை தொடரும்- அமைச்சர் சேகர்பாபு
- இந்த ஆட்சி அமைந்த பிறகு ரூ.7 ஆயிரத்து 400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
- உசிலம்பட்டி தொகுதியில் எந்தெந்த நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன என்ற விபரத்தை கொடுத்தால் மீட்டுத் தருவோம்.
சென்னை:
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், உசிலம்பட்டி தொகுதியில் அறநிலையத் துறைக்கு சொந்தமான 230 கோவில்கள் உள்ளன. அவற்றில் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ள நிலையில் 1, 700 ஏக்கர் நிலங்கள் மட்டுமே கண்டறியப்பட்டு உள்ளன. எஞ்சிய கோவில் நிலங்களையும் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
இந்த ஆட்சி அமைந்த பிறகு ரூ.7 ஆயிரத்து 400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உசிலம்பட்டி தொகுதியில் எந்தெந்த நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன என்ற விபரத்தை கொடுத்தால் மீட்டுத் தருவோம். ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலங்களை மீட்கும் வேட்டை தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.