தமிழ்நாடு
ஒரே நாளில் இரண்டு முறை அதிகரித்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ. 480 உயர்வு
- இன்று காலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்தது.
- மதியம் சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்தது.
2025-26-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்தது. பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுபோன்ற அறிவிப்பு ஏதும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இதனால் இன்று மதியம் 2-வது முறையாகவும் தங்கம் விலை உயர்ந்தது.
மதியம் சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்று சவரனுக்கு மொத்தமாக 480 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் 62,320 ரூபாய்க்கும், ஒரு கிராம் 7,790 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.