தமிழ்நாடு
சுனாமி நினைவு தினம்- நொச்சிக்குப்பம் கடற்கரையில் கவர்னர் அஞ்சலி
- பேரலையில் சிக்கி இறந்த நபர்களின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் அவர்களை நினைத்து கடற்கரையில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.
- சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி கவர்னர் அஞ்சலி செலுத்தினார்.
தமிழகத்தில் சுனாமி தாக்கி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.
சுனாமி நினைவு தினத்தையொட்டி இன்று காலை பேரலையில் சிக்கி இறந்த நபர்களின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் கடற்கரையில் உயிரிழந்தவர்களை நினைத்து பால் ஊற்றியும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சுனாமி நினைவு தினத்தையொட்டி சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார்.
சென்னை நொச்சிக்குப்பம் கடற்கரை பகுதியில் கவர்னர் பால் ஊற்றியும், மலர் தூவியும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அவர் அஞ்சலி செலுத்தினார்.