தமிழ்நாடு

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்பு

Published On 2025-03-03 18:51 IST   |   Update On 2025-03-03 18:51:00 IST
  • தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.
  • இஸ்லாமியப் பெருமக்களோடு கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார்.

இதுகுறித்து தவெகவின் தலைமை நிலையச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.

வரும் 7ஆம் தேதி (07.03.2025) மாலை, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற உள்ளது.

இதில் கழகத் தலைவர் அவர்கள், இஸ்லாமியப் பெருமக்களோடு கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

இடம்: ஒய்.எம்.சி.ஏ.அரங்கம். ராயப்பேட்டை, சென்னை

தேதி: 07.03,2025 வெள்ளிக்கிழமை

நோன்பு திறக்கும் நேரம்: மாலை, சரியாக மணி 6.24

மக்ஃரிப் பாங்கு: மாலை, மணி 6.28

மக்ஃரிப் தொழுகை: மாலை, மணி 6.35 (ஒய்.எம்.சி.ஏ. அரங்கிற்குள்)

மக்ஃரிப் தொழுகை முடிந்ததும் கழகத்தின் சார்பில் இஃப்தார் விருந்து நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News