நடிகைக்கு போதை பொருள் கொடுத்து சீமான் வன்கொடுமை செய்தார்- வீரலட்சுமி பரபரப்பு குற்றச்சாட்டு
- தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- சீமான் மீது தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய வீரலட்சுமி, "ஒரு நடிகை என்னிடம் கூறிய அந்தரங்க தகவல்களை எல்லாம் நான் கூறினால் சீமான் எவ்வளவு பெரிய காம கொடூரன் என்று சொல்லி அவர் பின்னல் நிற்கும் பெண்களே காரி துப்புவார்கள். நடிகைக்கு போதைப்பொருட்கள் கொடுத்து அவர் சுயநினைவு இல்லாத நேரத்தில் பாலியல் ரீதியாக கொடுமை படுத்தியுள்ளார்.
சீமான் குறித்த விபரங்களை வெளியிட்டால் பெண்களே அவரை அடித்து துரத்துவர். சீமானுக்கு பெண்கள் உரிமைக்காக போராட எந்த உரிமையும் இல்லை. வதந்திகள் பரப்புவதை சீமான் உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.