தமிழ்நாடு
முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை :
தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கி நடைபெற்ற முதல் மாநாட்டில் தனது அரசியல் எதிரி யார்? கொள்கை எதிரி யார்? என வெளிப்படையாக சொல்லி விமர்சித்து வரும் விஜய், ஒரு கட்டத்தில் பாசிசம், பாயாசம் என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, இன்று 72-வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.