தமிழ்நாடு
பாஜக எதிர்ப்பில் விஜய் உறுதியாக இல்லை- திருமாவளவன்
- இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் பாசிச கட்சிகள் என விஜய் கூறுகிறாரா?
- தவெக தலைவர் விஜயிடம் எதிர்பார்த்த அறிவிப்புகள், கொள்கை பிரகடனங்கள் இல்லை.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பிளவுவாத சக்திகள் என தவெக தலைவர் விஜய் வெளிப்படையாக கூறவில்லை. மேம்போக்காக பேசி இருக்கிறார்.
* சிறுபான்மையினர் மீதான விஜயின் நிலைப்பாடு என்ன? என்பது தெளிவாக தெரியவில்லை.
* இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் பாசிச கட்சிகள் என விஜய் கூறுகிறாரா?
* பாசிச கட்சி என்றால் அது பாஜக மட்டும் தான். நாங்கள் அதை எதிர்க்கிறோம்.
* பாஜக எதிர்ப்பில் விஜய் உறுதியாக இல்லை என்பதை நம்மால் உணர முடிகிறது.
* தவெக தலைவர் விஜயிடம் எதிர்பார்த்த அறிவிப்புகள், கொள்கை பிரகடனங்கள் இல்லை.
* திமுக மற்றும் திமுக அரசை, கலைஞர் குடும்பத்தை எதிர்ப்பதாகவே விஜயின் பேச்சு உள்ளது என்று அவர் கூறினார்.