தமிழ்நாடு

எந்தெந்த நாட்களில் என்ன செய்ய வேண்டும்? காதலர் தின அட்டவணை

Published On 2025-02-04 15:05 IST   |   Update On 2025-02-04 15:05:00 IST
  • மனதில் உள்ள காதலை வெளிப்படுத்தும் நாளாக இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உங்கள் காதலிக்கு அவர் எப்போதும் கொஞ்சிக் கொண்டிருக்கும் வகையில் டெடி பியர் பொம்மையை வாங்கி கொடுக்கலாம்.

காதலர் தினத்தையொட்டி எந்தெந்த நாட்களில் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி காதலர் தின அட்டவணை வெளியாகியுள்ளது. வருகிற 7-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை காதலர் தினத்தையொட்டி எந்தெந்த நாட்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை வகைப்படுத்தி வெளியிட்டுள்ளனர். சுவாரஸ்யமான அந்த தினங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

பிப்-7 ரோஜா தினம்

வருகிற 7-ந்தேதி ரோஜா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தாங்கள் விரும்பும் பெண்களுக்கு எப்போதுமே ரோஜா பூக்களை கொடுத்து மகிழும் வாலிபர்கள் இந்த நாளில் ரோஜாப்பூக்கள் மற்றும் பூங்கொத்தை கொடுத்து காதலர் தினத்தை வரவேற்க உள்ளனர்.

பிப்-8 காதலை தெரிவிக்கும் நாள்

மனதில் உள்ள காதலை வெளிப்படுத்தும் நாளாக இது தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் ரோஜாப்பூவை கொடுத்து மகிழ்வித்த சூட்டோடு சூடாக மனதில் உள்ளதை எந்தவித தயக்கமுமின்றி 'ஐ லவ் யூ' என விரும்பிய பெண்களிடம் காதலை வெளிப்படுத்தும் நாளாக இந்த இனிய நாள் பார்க்கப்படுகிறது.

பிப்-9 சாக்லேட் தினம்

தாங்கள் விரும்பும் பெண்களுக்கு வாலிபர்கள் சாக்லேட்டுகளை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடிப்பது வழக்கம். எந்த இனிப்புக்கும் இல்லாத தனிச்சுவை சாக்லேட்டுக்கு இருப்பதால் இந்த நாளில் சாக்லெட்டுகளை காதலிகளுக்கு ஊட்டி விட உகந்த நாள் என்கிற தகவலும் பரவி வருகிறது.

பிப்-10 டெடி தினம்

காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்த பல்வேறு வழிகளை கையாலும் நிலையில் இந்த நாள் டெடி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உங்கள் காதலிக்கு அவர் எப்போதும் கொஞ்சிக் கொண்டிருக்கும் வகையில் டெடி பியர் பொம்மையை வாங்கி கொடுக்கலாம்.

பிப்-11 வாக்குறுதி தினம்

எப்போதும் உன்னை விட்டு விலகவே மாட்டேன் என்பது போன்ற வாக்குறுதிகளை அளிப்பதற்கு உகந்த நாளாக இந்த நாளை பயன்படுத்த காதலர்கள் திட்டமிட்டுள்ளனர்.



பிப்-12 கட்டியணைக்கும் தினம்

கட்டி அணைப்பது என்பது காதலில் தவிர்க்கவே முடியாததாகிவிட்ட இந்த காலகட்டத்தில் கட்டி அனைத்து அன்பை வெளிப்படுத்தும் நாளாக காதலர்கள் இந்த நாளை தேர்வு செய்திருக்கிறார்கள்.

பிப்-13 முத்த தினம்

காதலின் மொத்த இன்பமுமே முத்தத்தில் தான் அடங்கி உள்ளதால் இந்த நாளை முத்தமழை பொழியும் நாளாக தேர்வு செய்திருக்கிறார்கள்.

பிப்-14 காதலர் தினம்



உச்சக்கட்ட கொண்டாட்ட நாளாக உள்ள இந்த நாள் ஊர் சுற்றுவதற்கு உகந்த நாளாகும் என்பதால் இந்த நாளில் வெளியில் சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

பிப்-15 கன்னத்தில் அறையும் தினம்

காதலர் தினத்தில் ஏதாவது சண்டை ஏற்பட்டு அதற்காக காதலனின் கன்னத்தில் அறையும் நாளாக இந்த நாளை தேர்வு செய்துள்ளனர்.

பிப்-16 உதைக்கும் தினம்

இன்னும் ஒருபடி மேலே சென்று காதலனை உதைக்கும் தினமாக இந்த நாளை தேர்வு செய்திருக்கிறார்கள். இதனால் தேவையில்லை என்றால் எட்டி உதைத்து வெளியேற்றும் நாளாக இந்த நாள் பார்க்கப்படுகிறது.

பிப்-17 வாசனை தினம்

சண்டை முடிந்த புத்துணர்ச்சி பெறும் வகையில் வாசனை திரவியங்களை காதலிக்கு வாங்கி கொடுத்து குஷிப்படுத்தும் நாளாக இதனை மாற்றிக் கொள்ளலாம்.

பிப்-18 காதல் தினம்

பிப்-14 காதலர் தினமாக கடைப்பிடிக்கப்படும் நிலையில் பிப்-18 ஐ காதல் நாளாக கடைபிடிக்கும் தகவலும் வெளியாகி உள்ளது. காதலர் தினத்தில் ஏற்பட்ட சண்டை சச்சரவுகளை தீர்த்து கொள்ளும் நாளாக இந்த நாள் பார்க்கப்படுகிறது.

பிப்-19 மன்னிப்பு தினம்

காதலர்கள் மத்தியில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி பேசி தீர்த்து தவறு செய்தவர்கள் மன்னிப்பு கேட்கும் தினமாக இந்த நாளை காதலர்கள் தேர்வு செய்துள்ளனர்.

பிப்-20 மாயமாகும் தினம்

காதலர்கள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு புரிந்து சென்று மாயமாகும் தினமாக இந்த நாள் பார்க்கப்படுகிறது.

பிப்-21 பிரியும் தினம்

காதலர்களுக்கு இடையேயான சண்டை முற்றி முழுமையாக பிரியும் தினமாக இந்த நாள் உள்ளது. பிரிவோம்... சந்திப்போம் என்பதுதானே எப்போதும் காதலின் மொழியாக உள்ளது.

Tags:    

Similar News