செய்திகள்

வங்காளதேசத்தில் கோயில் பூசாரி கழுத்தை அறுத்து படுகொலை

Published On 2016-06-07 12:02 IST   |   Update On 2016-06-07 15:39:00 IST
மத சகிப்புத் தன்மையின்மைக்கு புகழ்பெற்ற வங்காளதேசத்தில் இன்று காலை இந்து கோயில் பூசாரி (65) கழுத்தை அறுத்து துடிதுடிக்க படுகொலை செய்யப்பட்டார்.
டாக்கா:

மத சகிப்புத்தன்மையின்மைக்கு புகழ்பெற்ற வங்காளதேசத்தில் இன்று காலை இந்து கோயில் பூசாரி (65) கழுத்தை அறுத்து துடிதுடிக்க படுகொலை செய்யப்பட்டார்.

வங்காளதேசத்தில் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள்மீது சமீபகாலமாக கொலைவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அதில் சமீபத்திய சம்பவமாக மேற்கு ஜினாய்கா மாவட்டத்தில் இன்று காலை சுமார் 9.30 மணியளவில் இங்குள்ள இந்து கோயில் பூசாரி ஒருவர் கழுத்தை அறுத்து துடிதுடிக்க படுகொலை செய்யப்பட்டார்.

மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் வந்த சில மர்மநபர்கள், பூசாரி அனந்த கோபால் கங்குலி என்பவரின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் நிகழ்ந்த இதுபோன்ற படுகொலைகளுக்கு இங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளும், இந்திய தீபகற்பத்தில் உள்ள அல்-கொய்தா இயக்கத்தினரும் அவர்களின் ஆதரவாளர்களும் பொறுப்பேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற பூசாரி அனந்த கோபால் கங்குலி கொலைக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

Similar News