செய்திகள்

கனடா பிரதமர் ஜஸ்டின் பொங்கல் வாழ்த்து

Published On 2017-01-16 05:52 IST   |   Update On 2017-01-16 05:52:00 IST
கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடியு, தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டொரண்டோ:

கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடியு, தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், ‘வணக்கம். கனடாவாழ் தமிழர்களும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் தங்கள் அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து தைப்பொங்கலை கொண்டாடுகின்றனர். இந்த பொங்கல் விசேஷ அர்த்தமும், பாரம்பரியமும் கொண்டது. இப்பண்டிகை, அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்தது. கனடாவாழ் தமிழர்கள் இந்த நாட்டை வலிமையான, வளமான நாடாக ஆக்கியவர்கள். அவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள்’ என்று அவர் கூறியுள்ளார். 

Similar News