உலகம்
சேதமடைந்த கட்டிடம்

வெகுதூரத்தில் உள்ள நகரங்களின் மீது தாக்குதல் நடத்திய ரஷியப் படைகள்

Published On 2022-03-11 14:41 IST   |   Update On 2022-03-11 14:41:00 IST
உக்ரைனின் வடக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்கள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளதால், போரின் புதிய திசையை குறிப்பிடுவதாக இருக்கலாம் கருதப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 24-ந்தேதி ரஷியப் படைகள் குண்டுகள் வீசி தாக்குதலை தொடங்கியது. அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில்,இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையிலான பேச்சுவார்த்தைக்கு துருக்கி ஏற்பாடு செய்தது.

அதன்படி நேற்று துருக்கியில் ரஷியா- உக்ரைன் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தின. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.

இதற்கிடையே சுமி போன்ற முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் வெளியேறும் வகையில் போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷியா, மனிதாபிபமான பாதையை திறந்துவிட்டது.

நேற்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் ரஷியா மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. இன்று யாரும் எதிர்பாராத வகையில் மேற்கு பகுதியில் உள்ள இவானே-பிரான்கிவ்ஸ்க், லட்ஸ்க் ஆகிய நகரங்கள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நகரங்களில் உள்ள விமான நிலையம் அருகே தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ரஷிய படைகள் கடந்த இரண்டு வாரங்களாக உக்ரைனின் கிழக்குப் பதிகளைத்தான் தாக்கி வந்தன. தற்போது மேற்கு எல்லையில் மிக தொலைவில் உள்ள நகரங்கள் மீது இன்று தாக்குதல் நடத்தியன் மூலம் ரஷியா போருக்கான புதிய திசையை குறிக்கலாம் என கருதப்படுகிறது.

Similar News