உலகம்

காசாவில் போர்நிறுத்தம்: இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பு ஒப்புதல்

Published On 2025-01-15 23:16 IST   |   Update On 2025-01-15 23:37:00 IST
  • போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சித்தன.
  • இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

டெல் அவிவ்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் வருகிற திங்கட்கிழமை அதிபராக பதவி ஏற்க உள்ளார். அதற்கு முன் பேச்சுவார்த்தை வெற்றியடைந்து இஸ்ரேல்- காசா இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் எனவும், ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியானது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப், தான் அதிபராக பதவி ஏற்பதற்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடையும் என நம்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கானோரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.

இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை பரிமாற்றம் செய்ய இருதரப்பும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 15 மாதமாக நடந்து வரும் காசா போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News