உலகம்

ஐவரி கோஸ்டில் விபத்து: பஸ்கள் தீப்பிடித்து 26 பேர் பலி

Published On 2024-12-07 12:46 IST   |   Update On 2024-12-07 12:46:00 IST
  • 2 மினி பஸ்கள் மோதிய வேகத்தில் அந்த பஸ்கள் தீப்பிடித்து எரிந்தன.
  • பஸ்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற முடியாமல் சிக்கி கொண்டனர்.

ஐவரி கோஸ்ட் நாட்டின் மத்திய மேற்குப் பகுதியில் உள்ள ப்ரோகோவா என்ற கிராமத்தில் 2 மினி பஸ்கள் மோதி விபத்து ஏற்பட்டது. மோதிய வேகத்தில் அந்த பஸ்கள் தீப்பிடித்து எரிந்தன.

இதில் பஸ்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற முடியாமல் சிக்கி கொண்டனர். இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஐவரி கோஸ்ட்டில் பாழடைந்த சாலைகள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News