உலகம்
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை
- ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் தென் மேற்கு பகுதியில் உள்ள கைஷூ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.9 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து 37 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது.
இதனை ஐரோப்பிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானின் தென் மேற்கு கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.