உலகம்

டிரம்பின் வரி மிரட்டல் தீங்கு என்பதை கருத்தில் கொள்க... அமெரிக்கர்களுக்கு ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தல்

Published On 2025-01-13 08:05 IST   |   Update On 2025-01-13 08:44:00 IST
  • கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல்.
  • அமெரிக்கா பயன்படுத்தும் நான்கில் ஒரு பங்கு எண்ணெய் கனடாவில் இருந்து வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா இணைய வேண்டும் என டொனால்டு டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ, டிரம்பின் வரி மிரட்டல் தீங்கு என்பதை அமெரிக்க மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது:-

அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா இணைய வேண்டும் என்கிறார். இது நடக்கப்போவதில்லை. கனடாவில் இருந்து வரும் மின்சாரம் அல்லது எண்ணெய்க்கு 25 சதவீதம் கூடுதல் வரி என்பதை எந்த அமெரிக்கரும் விரும்பமாட்டார்கள். இது தொடர்பாக அமெரிக்க மக்கள் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

அனைத்து அமெரிக்க மக்களின் வாழ்க்கையையும் எளிதாக்குவதற்காக டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதற்கான முயற்சியை அவர் செய்ய வேண்டும். அனைத்து அமெரிக்க ஊழியர்களுக்கும் ஆதரவாக இருக்க வேண்டும். வரி உயர்வு போன்ற விசயங்கள் அவர்ளை தீங்கு விளைவிக்க போகிறது.

இவ்வாறு ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடாவிடம் இருந்து எண்ணெய் அல்லது எந்தவொரு பொருட்களும் அமெரிக்காவுக்கு தேவையில்லை. ஆனால், அமெரிக்கா பயன்படுத்தும் நான்கில் ஒரு பங்கு எண்ணெய் கனடாவில் இருந்து வருகிறது. அல்பெர்ட்டா மாகாணம் அமெரிக்காவுக்கு தினசரி 4.3 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

Tags:    

Similar News