உலகம்
கனடா பிரதமர் போட்டியில் இருந்து அனிதா ஆனந்த் விலகல்
- பாராளுமன்றத்திற்கும் மீண்டும் போட்டியிடப்போவதில்லை.
- அமைச்சரவை இலாகாக்களை வழங்கிய ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நன்றி.
கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் விலகினார். அடுத்த பிரதமருக்கான போட்டியில் அமைச்சர் அனிதா ஆனந்த் உள்பட 9 பேர் களத்தில் குதித்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா ஆனந்த், தான் பிரதமர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, பிரதமர் பதவிப் போட்டியில் இருந்து விலகியுள்ளேன். மேலும் பாராளுமன்றத்திற்கும் மீண்டும் போட்டியிடப்போவ தில்லை. தனக்கு முக்கிய அமைச்சரவை இலாகாக்களை வழங்கிய ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நன்றி. என்னை எம்.பி.,யாக்கிய ஓக்வில்லி தொகுதி மக்களுக்கு உண்மையாகவே நன்றியுடன் இருக்கிறேன். கல்வித்துறைக்குத் திரும்புவதன் மூலம் எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்க உள்ளேன் என்றார்.