உலகம்

தாண்டவாளத்தில் குண்டுவெடிப்பு.. ரெயிலை கடத்திய பரபரப்பு 'வீடியோ'வை வெளியிட்ட பலுசிஸ்தான் விடுதலை படை!

Published On 2025-03-12 15:43 IST   |   Update On 2025-03-12 15:43:00 IST
  • ரெயிலில் 30 பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
  • 17 சுரங்கப்பாதைகளைக் கொண்ட குவெட்டா-பெஷாவர் ரெயில்பாதை, ரயில்கள் அதிவேகத்தில் செல்வதை கடினமாக்குகிறது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெஷாவர் செல்லும் பயணிகள் ரெயில் நேற்று கடந்தப்பட்டது. 400க்கும் மேற்பட்ட பயணிகளை, பெரும்பாலும் பாதுகாப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஜாபர் எக்ஸ்பிரஸ், சிபி நகரம் வழியாகச் சென்றபோது இந்த கடத்தல் நிகழ்ந்தது.

பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தானைப் பிரிப்பதற்கு முயற்சிக்கும் பிரிவினைவாதக் குழுவான பலுச் விடுதலைப் படையின் மஜீத் படைப்பிரிவால் இந்த கடத்தல் அரங்கேறியது.

ரெயிலில் பெண்கள், குழந்தைகளை விடுவித்த பின்னர், மீதமிருந்த 214 ஆண் பயணிகள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டனர். மேலும் குறைந்தது ரெயிலில் 30 பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

கடத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகும் பாகிஸ்தான் ராணுவம் எடுத்த நடவைக்கையில் பாதுகாப்புப் படையினரால் 27 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டு ரெயில் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ரெயில் கடத்தப்பட்ட பரபரப்பு வீடியோவை பலுச் விடுதலைப் படை வெளியிட்டுள்ளது. 17 சுரங்கப்பாதைகளைக் கொண்ட குவெட்டா-பெஷாவர் ரெயில்பாதை, ரயில்கள் அதிவேகத்தில் செல்வதை கடினமாக்குகிறது.

இதை பயன்படுத்திய கிளர்ச்சியாளர்கள் சுரங்கப்பாதை எண் 8 அருகே ஜாபர் எக்ஸ்பிரஸ் வந்துகொண்டிருந்தபோது தண்டவாளத்தை வெடிக்கச்செய்து ரெயிலை நிறுத்தி உள்ளே ஏறியுள்ளனர்.

ரெயில் தண்டவாளம் வெடிப்பது, ரெயில் நிறுத்தப்படுவது உள்ளிட்ட காட்சிகள் அவர்கள் வெளியிட்ட வீடியோவில் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பல மாதங்களாக திட்டமிட்டு இந்த கடத்தல் நடத்தப்பட்டுள்ளது புலனாகிறது. 

Tags:    

Similar News