உலகம்
நமது மதுபானங்களுக்கு இந்தியா 150 சதவீதம் வரி விதிக்கிறது.. அமெரிக்கா கொந்தளிப்பு!
- வெள்ளை மாளிகையில் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் பேசினார்.
- உலக சமூகம் அமெரிக்காவை பல காலமாக ஏமாற்றி வருகிறது என்றார்.
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இதையடுத்து இந்தியா மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறும்போது, அதிபர் டிரம்ப் நியாயமான, சமநிலையான வர்த்தக நடைமுறை களை விரும்புகிறார்.
கனடாவில் அமெரிக்க வெண்ணை பொருட்களுக்கு 300 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் அமெரிக்க மதுபானங்களுக்கு 150 சதவீத வரி விதிக்கிறார்கள். ஜப்பானை பொறுத்தவரை அரிசிக்கு 700 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
துரதிருஷ்டவசமாக, கடந்த பல தசாப்தங்களாக கனடா நம்மை மிகவும் நியாயமாக நடத்தவில்லை. உலக சமூகம் அமெரிக்காவை பல காலமாக ஏமாற்றி வருகிறது என்றார்.