உலகம்

கண்டித்த தந்தையை போலீசில் சிக்க வைத்த சிறுவன்

Published On 2025-02-16 14:59 IST   |   Update On 2025-02-16 14:59:00 IST
  • சீனாவில் சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிறுவர்களை வாழ்த்தி அவர்களின் உறவினர்கள் பணம் வழங்குவது வழக்கம்.
  • பணத்தை சேமித்து வைத்திருக்கும் சிறுவர்கள் அந்த பணத்தை தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள்.

குழந்தைகள் நன்றாக படிக்கவில்லை என்றால் அவர்களை பெற்றோர் கண்டிப்பது இயல்பு. இவ்வாறு ஒரு தந்தை தனது மகனை திட்டியதால் ஆவேசமடைந்த சிறுவன் தந்தையை போலீசில் சிக்க வைத்த சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.

சீனாவில் சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிறுவர்களை வாழ்த்தி அவர்களின் உறவினர்கள் பணம் வழங்குவது வழக்கம். இவ்வாறு கிடைக்கும் பணத்தை சேமித்து வைத்திருக்கும் சிறுவர்கள் அந்த பணத்தை தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள்.

இந்நிலையில் சந்திர புத்தாண்டையொட்டி தனக்கு கிடைத்த அதிர்ஷ்ட பணத்தை எனது தந்தை திருடி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்சு மாகாண பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் போலீசில் புகார் அளித்துள்ளான். உடனடியாக போலீஸ் அதிகாரிகள் அந்த சிறுவனின் வீட்டுக்கு சென்று விசாரித்த போது தான் சிறுவன் சரியாக படிக்கவில்லை என்பதால் அவனை தந்தை கண்டித்ததும், அந்த ஆத்திரத்தில் அவரை போலீசில் சிக்க வைத்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் சிறுவனுக்கு அறிவுரை கூறினர். உனது பணத்தை தந்தை பத்திரமாக வைத்திருப்பார். உனக்கு பணம் தேவைப்படும் போது அந்த செலவுகளை அவர் செய்வார் என அறிவுரை வழங்கினர்.

Tags:    

Similar News