உலகம்

பாகிஸ்தான்

பாகிஸ்தானில் வெளிநாட்டு வேலை தேடுவோர் எண்ணிக்கை உயர்வு

Published On 2022-06-12 05:46 GMT   |   Update On 2022-06-12 05:46 GMT
  • கடந்த 2020ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2021ம் ஆண்டில் வெளிநாட்டு வேலையை தேடுவோரின் எண்ணிக்கை 27.6 சதவீதம் உயர்ந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த தகவலை பாகிஸ்தானின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு குடியேற்ற வாரியம் தெரிவித்து உள்ளது.

லாகூர்:

பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்பட்டுள்ள இழப்பு, கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றால் அந்நாட்டு குடிமக்களில் பலர் வேலையில்லாமல், வருவாயுமின்றி திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் 1,56,877 பேர், கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 76,213 பேர் உள்பட 2.86 லட்சத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் வெளிநாடுகளில் வேலை தேடி பதிவு செய்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இவர்களில் 54 சதவீதம் பேர் சவுதி அரேபியா, 13.4 சதவீதம் பேர் ஓமன் மற்றும் 13.2 சதவீதம் பேர் கத்தார் ஆகிய நாடுகளுக்கு வேலைக்கு செல்வதென்று முடிவு செய்துள்ளனர். இதனை பாகிஸ்தானின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு குடியேற்ற வாரியம் தெரிவித்து உள்ளது.

இதன்படி, கடந்த 2020ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2021ம் ஆண்டில் வெளிநாட்டு வேலையை தேடுவோரின் எண்ணிக்கை 27.6 சதவீதம் உயர்ந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News