உலகம்

தெருக்களில் ரோந்து செல்லும் போலீஸ் 'ரோபோ'- வீடியோ

Published On 2024-12-12 01:59 GMT   |   Update On 2024-12-12 01:59 GMT
  • அதிக ஆபத்தான சூழல்களிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ போலீசாருடன் சேர்ந்து ரோந்து செல்கிறது.
  • மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரோபோவில் மேம்பட்ட சென்சார்களும் உள்ளது.

ரோபோக்கள் பயன்பாடு மருத்துவத்துறை, போக்குவரத்து, கல்வி, வாடிக்கையாளர் சேவை என பல துறைகளிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில் சீனாவில் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கோள வடிவிலான போலீஸ் 'ரோபோ' தெருக்களில் ரோந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த 'ரோபோ' வழக்கமான ரோபோக்கள் போல் அல்லாது கண்காணிப்பு வசதிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை துரத்தவும், அவர்களை பிடிக்கவும் இந்த 'ரோபோ' உபயோகமாக இருக்கும். நீரிலும், நிலத்திலும் தடையின்றி செயல்படும் வகையில் உருண்டை வடிவில் வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோ சுற்றுப்புறங்களை விழிப்புடன் கண்காணிக்கிறது.

அதிக ஆபத்தான சூழல்களிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ போலீசாருடன் சேர்ந்து ரோந்து செல்கிறது. மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரோபோவில் மேம்பட்ட சென்சார்களும் உள்ளது. இதன்மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிக்கவும் முடியும்.




Tags:    

Similar News