உலகம்

கார் திருப்தியில்லை... அதிருப்தி அடைந்த வாடிக்கையாளரின் அதிரவைத்த முடிவு- வீடியோ வைரல்

Published On 2024-12-12 04:22 GMT   |   Update On 2024-12-12 04:22 GMT
  • புதிய காரை ஓட்டி வந்து விற்பனை நிலையத்தின் முன்பக்க கண்ணாடி கதவை உடைத்தார்.
  • கண்ணாடி கதவு, மேஜை உள்ளிட்ட பொருட்கள் நொறுங்கி சிதறும் வீடியோ எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.

கார் வாங்கி அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர், விற்பனை நிலைய கண்ணாடி கதவை உடைத்துக் கொண்டு வந்து காரை நிறுத்தும் வீடியோ இணையத்தில் பரவுகிறது. அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் ஒரு கார் விற்பனை நிலையத்தில் மைக்கேல் முர்ரே (வயது35) என்பவர் புதிய காரை பதிவு செய்து வாங்கினார்.

காரை ஓட்டிச் சென்ற சிறிது நேரத்தில் அவர் திரும்ப வந்தார். 'கார் திருப்தியில்லை, காரை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்' என்று விற்பனை நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டார். ஆனால் 'விற்பனை செய்த காரை திரும்பப் பெறுவதில்லை' என்று அதிகாரிகள் பதிலளித்தனர்.

இதனால் மைக்கேல் ஆத்திரம் அடைந்தார். 'காரை ஷோரூம் கதவை உடைத்துக் கொண்டு ஓட்டுவேன்' என்று ஆவேசமாக கூறினார். அதற்கு கார் நிறுவனத்தினர் 'மிரட்டல் வேண்டாம்' என்று அனுப்பினர். அவசரமாக வெளியே சென்ற மைக்கேல் தான் சொன்னபடியே புதிய காரை ஓட்டி வந்து விற்பனை நிலையத்தின் முன்பக்க கண்ணாடி கதவை உடைத்தார். கண்ணாடி கதவு, மேஜை உள்ளிட்ட பொருட்கள் நொறுங்கி சிதறும் வீடியோ எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. ஒரு கோடியே 75 லட்சம் பேர் வீடியோவை பார்வையிட்டு உள்ளனர். இது தொடர்பாக மைக்கேல் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.



Tags:    

Similar News