உலகம்

பிரான்சின் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியர் நியமனம்

Published On 2024-09-05 13:04 GMT   |   Update On 2024-09-05 13:04 GMT
  • பிரான்சின் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியரை அந்நாட்டு அதிபர் மேக்ரான் நியமித்தார்.
  • பல்வேறு பதவிகளை வகித்துள்ள பார்னியர், ஐரோப்பிய ஒன்றிய ஆணையராக இருந்துள்ளார்.

பாரீஸ்:

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியவர் மைக்கேல் பார்னியர் (73). இவர் 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.

பல்வேறு பிரெஞ்சு அரசாங்கங்களில் பதவிகளை வகித்த இவர், ஐரோப்பிய ஒன்றிய ஆணையராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில், பிரான்சின் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியரை அந்நாட்டு அதிபர் இம்மானுவல் மேக்ரான் நியமனம் செய்து உத்தரவிட்டு உள்ளார் என பிரதமர் இல்ல அதிகாரி தெரிவித்தார்.

இதன்மூலம் பிரான்சின் மிகவும் வயதான பிரதமர் என்ற பெருமையை மைக்கேல் பார்னியர் பெறுகிறார்.

Tags:    

Similar News