உலகம்

அமெரிக்காவில் இந்திய இளைஞர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை

Published On 2025-01-20 15:39 IST   |   Update On 2025-01-20 15:39:00 IST
  • முதுகலை படிப்பதற்காக 2022 இல் அமெரிக்கா சென்ற ரவி தேஜா சமீபத்தில் தனது படிப்பை முடித்து அங்கு வேலை தேடி வந்தார்.
  • அவரது தந்தை கொய்யாடா சந்திரமௌலி செய்தியாளர்களிடம் கூறினார்.

அமெரிக்காவில் வேலை தேடி வந்த இந்திய இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கனா மாநிலம் ஐதராபாத்தின் சைதன்யபுரி பகுதியில் உள்ள ஆர்.கே.புரம், கிரீன் ஹில்ஸ் காலனியைச் சேர்ந்தவர் கொய்யாடா ரவி தேஜா. முதுகலை படிப்பதற்காக 2022 இல் அமெரிக்கா சென்ற ரவி தேஜா சமீபத்தில் தனது படிப்பை முடித்து அங்கு வேலை தேடி வந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் அவென்யூவில் நேற்று [ஞாயிற்றுக்கிழமை] அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தேஜா வீடு திரும்பும் போது அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டதாக இன்று காலை எங்களுக்கு தகவல் கிடைத்தது என்று அவரது தந்தை கொய்யாடா சந்திரமௌலி செய்தியாளர்களிடம் கூறினார்.

குடும்பத்தினருக்கு கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, தேஜா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று தெரியவந்துள்ளது. 

Tags:    

Similar News