உலகம்
டிரம்ப் போன்று தோற்றமளிக்கும் தள்ளுவண்டி 'குல்பி' வியாபாரி
- புதிய வீடியோக்கள் மீண்டும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
- செல்பி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் போலவே பாகிஸ்தானில் தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் தோற்றமளிக்கிறார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஷாகிவால் பகுதியை சேர்ந்த சலீம் பாக்கா தள்ளுவண்டியில் 'குல்பி' வியாபாரம் செய்து வருகிறார். டிரம்ப்பை போலவே தோற்றமளிக்கும் இவர் சந்தை பகுதியில் பாட்டு பாடி வியாபாரம் செய்யும் வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது அவரின் புதிய வீடியோக்கள் மீண்டும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மேலும் அப்பகுதியை சேர்ந்த பலரும் அவருடன் செல்பி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.