விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி.. மனைவி மிச்செல் பிறந்தநாளுக்கு ஒபாமா உருக்கமான வாழ்த்து
- டிரம்ப் அதிபராக பதவியேற்கும் விழாவிலும் ஒபாமாவுடன் மிச்செல் கலந்துகொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டது.
- நேற்று [ஜனவரி 17] மிச்செல் பிறந்தநாள் கொண்டாடினார்
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா விவாகரத்து செய்ய உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.
முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டரின் அரசு இறுதிச் சடங்கில் ஒபாமாவுடன் மிச்செல் வரவில்லை. மேலும் வரும் ஜனவரி 20 ஆம் தேதி நடக்கும் டிரம்ப் அதிபராக பதவியேற்கும் விழாவிலும் ஒபாமாவுடன் மிச்செல் கலந்துகொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டது.
இதன் விளைவாகவே விவாகரத்து வதந்திகள் வலுப்பெற்றன. இந்நிலையில் மிச்செல்லின் பிறந்தநாளுக்கு தனது எக்ஸ் பதிவில் உருக்கமாக வாழ்த்து தெரிவித்து வதந்திகளுக்கு ஒபாமா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நேற்று [ஜனவரி 17] மிச்செல் பிறந்தநாளை முன்னிட்டு ஒபாமா வெளியிட்டுள்ள பதிவில்,
"என் வாழ்க்கையின் அன்பான @MichelleObama. உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நீ வீட்டின் ஒவ்வொரு அறையையும் அரவணைப்பு, அறிவு, சந்தோஷம் மற்றும் கருணையால் நிரப்புகிறாய். உன்னுடன் வாழ்க்கையின் சாகசங்களைச் சேர்ந்து செய்ய முடிந்ததால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். உன்னை நேசிக்கிறேன்!" என்று பதிவிட்டுள்ளார். இருவரும் சேர்ந்து உணவருந்தும் புகைப்படத்தையும் ஒபாமா பகிர்ந்துள்ளார்.