உலகம்

 கோப்புப் படம்

உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் சுட்டுக் கொலை.. ஈரானில் பரபரப்பு

Published On 2025-01-18 17:18 IST   |   Update On 2025-01-18 17:18:00 IST
  • கைத்துப்பாக்கியுடன் உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்த அந்த நபர் நீதிபதிகள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளான்.
  • கொல்லப்பட்ட நீதிபதிகள் இருவரும் தேசிய பாதுகாப்பு, பயங்கரவாதம், உளவு பார்த்தல் போன்ற முக்கிய வழக்குகளில் விசாரணை நடத்தியவர்கள்.

ஈரான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் தெஹ்ரானில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்திற்குள் இன்று [சனிக்கிழமை] காலை மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு நீதிபதிகள் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கைத்துப்பாக்கியுடன் உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்த அந்த நபர் நீதிபதிகள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

பலியானவர்கள் அல் ரஜினி மற்றும் அல் மொகிஸ்சே என அடையாளம் காணப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தன்னைதானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட நீதிபதிகள் இருவரும் தேசிய பாதுகாப்பு, பயங்கரவாதம், உளவு பார்த்தல் போன்ற முக்கிய வழக்குகளில் விசாரணை நடத்தி வந்தவர்கள் என ஈரானின் நீதித்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களின் நோக்கம் தெரியாத நிலையில் அவர் மீது இதற்குமுன் எந்த வழக்கும் இல்லை என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

Similar News