உலகம்

இந்திய கடற்படை கப்பல் தர்காஷ் 

கடற்கொள்ளை தடுப்பு பயிற்சி- காபோன் நாட்டிற்கு இந்திய கடற்படை கப்பல் பயணம்

Published On 2022-09-27 02:11 IST   |   Update On 2022-09-27 02:11:00 IST
  • பாதி்க்கப்பட்டவர்கள் மீட்பு உள்ளிட்ட பயிற்சிகளில் இந்திய கடற்படை வீரர்கள் ஈடுபடுவார்கள்.
  • இந்திய கடற்படை கப்பலை பார்வையிட பொதுமக்களுக்கம் அனுமதி.

ஜென்டில்:

இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் தர்காஷ், கினியா வளைகுடாவில் உள்ள காபோன் நாட்டில் நடைபெறும் கடற்கொள்ளை தடுப்பு பயிற்சியில் பங்கேற்கிறது. இதற்காக அங்குள்ள ஜென்டில் துறைமுகத்தை தர்காஷ் சென்றடைந்தது. மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காபோன் நாட்டிற்கு சென்றுள்ள முதலாவது இந்திய கடற்படை கப்பல் இது. 


ஜென்டில் துறைமுகத்தில், அதிகாரப்பூர்வ மற்றும் தொழில்சார்ந்த பேச்சுவார்த்தைகளில் இந்திய கடற்படை ஊழியர்கள் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உரையாடலின் போது, தீயணைப்பு தொடர்பான விவாதங்கள் நீர்மூழ்கி நடவடிக்கைகள் உள்ளிட்டவை இடம்பெறும். மேலும் சேதம் தவிர்த்தல், மருத்துவம் மற்றும் பாதி்க்கப்பட்டவர்கள் மீட்பு குறித்த பயிற்சிகளும் இடம் என கூறப்பட்டுள்ளது. இந்திய கடற்படைக் கப்பலை பார்வையிட பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News