உக்ரைன் எல்லையில் இருந்து வடகொரிய வீரர்களை வெளியேற்றிய ரஷியா
- வடகொரியா 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு அனுப்பியது.
- குர்ஸ்க் எல்லையில் இருந்து அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
மாஸ்கோ:
உக்ரைன் மீதான ரஷியா போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அந்த நாடுகள் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குகின்றன.
அதேபோல் நட்பு நாடான வடகொரியா 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு அனுப்பியது. ரஷியா அந்த வீரர்களை உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள குர்ஸ்க் பிராந்திய எல்லை அருகே நிறுத்தியது.
ஆனால் உக்ரைனின் தாக்குதல் மற்றும் மோசமான வானிலையை அவர்களால் தாக்குப்பிடித்து நிற்க முடியவில்லை. இதனால் சுமார் 4 ஆயிரம் வடகொரிய வீரர்கள் காயம் அடைந்தனர். எனவே குர்ஸ்க் எல்லையில் இருந்து அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
உக்ரைனின் சரமாரி தாக்குதலில் பலர் இறந்ததால் வடகொரியா வீரர்களை பின்வாங்கும் கட்டாயம் ரஷியாவுக்கு ஏற்பட்டு இருக்கலாம் என உக்ரைன் ராணுவ செய்தித்தொடர்பாளர் அலெக்சாண்டர் கிண்ட்ராடென்கோ தெரிவித்துள்ளார்.