உலகம்

மோசடிக்காரர்களை அலறவிட்ட மூதாட்டி

Published On 2024-05-17 07:53 GMT   |   Update On 2024-05-17 07:53 GMT
  • பலமுறை மோசடி காலர்களை அவர் அலறவிட்டுள்ளார் எனக்கூறிய பும்மாவின் பேத்தி இதுதொடர்பான வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
  • வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மோசடிகள் பல்வேறு வகைகளிலும் நடைபெறுகிறது. செல்போனுக்கு வரும் சில அழைப்புகளில் பேசுபவர்கள் நூதனமாக பேசி வங்கி கணக்கு எண்ணை பெற்று அதன் மூலம் மோசடிகளை அரங்கேற்றி வருகிறார்கள்.

போலீசார் எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மோசடிக்காரர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கி பணத்தை பறிகொடுக்கும் சம்பவங்கள் உலகம் முழுவதும் நடக்கத்தான் செய்கிறது. ஆனால் அவ்வாறு நூதன மோசடியில் ஈடுபடுபவர்களையும் பும்மா என்று அழைக்கப்படும் 92 வயது மூதாட்டி ஒருவர் அலறவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியை சேர்ந்த 92 வயது மூதாட்டி ஒருவருக்கு இதுபோன்று மோசடிக்காரர் ஒருவர் போன் செய்து பேசி உள்ளார். அவரை வெறுப்பேத்தும் வகையில் மூதாட்டி பேசிய வீடியோவை அவரது பேத்தி செய்யேனி தோனி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதுகுறித்து பும்மாவின் பேத்தி கூறுகையில், எனது பாட்டி பிறரை சிரிக்க வைக்கும் குணம் படைத்தவர். அவர் எங்களுக்கு ஏராளமான பொழுதுபோக்குகளை தருவார். ஒருமுறை மோசடி காலர் அவரிடம் போன் செய்த போது, 'என்னை யாரோ கடத்தப்போகிறார்கள் என்று நினைக்கிறேன். உனக்கு தெரியுமா? ஜீசஸ் கூடிய விரைவில் வருகிறார். அவர் என்னை மேகங்களோடு அழைத்து செல்லப்போகிறார். நீ செல்வதற்கு தயாராக உள்ளாயா?' என்று கேட்டார். இதைக்கேட்ட மோசடி காலர் உடனே போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதுபோன்று பலமுறை மோசடி காலர்களை அவர் அலறவிட்டுள்ளார் எனக்கூறிய பும்மாவின் பேத்தி இதுதொடர்பான வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News