உலகம்
அமெரிக்காவில் அவசர உதவி எண்ணிற்கு 17 முறை கால் செய்த நபர் கைது
- ஆடம் வான் என்ற நபர் அவசர உதவி எண்ணான 911-க்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
- போலீசின் வாகனத்தில் வந்து தன்னை இறக்கி விடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் அவசர உதவி எண்ணான 911-க்கு தொடர்ந்து 17 முறை அழைத்து போலீசை தொந்தரவு செய்த 24 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆடம் வான் என்ற நபர் அவசர உதவி எண்ணான 911-க்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அருகில் இருக்கும் மளிகை கடைக்கு செல்வதற்கு பொது போக்குவரத்தை பயன்படுத்தாமல், போலீசின் வாகனத்தில் வந்து தன்னை இறக்கி விடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை கேட்டு கடுப்பான போலீசார் ஆடம் வான் இருப்பிடத்திற்கே சென்று அவரை எச்சரித்துள்ளனர். அவசர உதவிக்கு மட்டும் தான் 911 எண்ணை தொடர்பு கொள்ளவேண்டும் என்று போலீசார் அவரிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதனையடுத்து 911 எண்ணுக்கு ஆடம் வான் 17 ஆவது முறையாக மீண்டும் அழைத்துள்ளார். பின்னர் அவசர உதவி எண்ணை தவறாக பயன்படுத்தியதாக கூறி ஆடம் வானை போலீசார் கைது செய்தனர்.