நடுவானில் சென்ற போது திடீர் புகை.. அவசரமாக தரையிறங்கிய விமானம் - பயணிகள் அதிர்ச்சி
- மீண்டும் சியாட்டில் விமான நிலையத்திற்கே திருப்பிவிடப்பட்டது.
- புகை வந்ததை பணியாளர்கள் கண்டறிந்து தெரிவித்தனர்.
ஹவாய் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றின் காக்பிட்-இல் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சியாட்டில் விமான நிலையத்தில் இருந்து ஹானோலுலு நோக்கி புறப்பட்ட விமானத்தின் காக்பிட்-இல் திடீரென புகை வந்தது. இதையடுத்து விமானம் மீண்டும் சியாட்டில் விமான நிலையத்திற்கே திருப்பிவிடப்பட்டது.
திங்கள்கிழமை மதியம் 1 மணி அளவில் சியாட்டில் விமான நிலையத்தில் இருந்து 273 பயணிகள் மற்றும் பத்து பணியாளர்களுடன் ஹவாய் ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான ஏர்பஸ் ஏ330 புறப்பட்டது. சியாட்டிலில் இருந்து ஹானோலுலு புறப்பட்ட விமானத்தில் திடீரென புகை வந்ததை பணியாளர்கள் கண்டறிந்து தெரிவித்தனர்.
இதையடுத்து விமானத்தில் அவசர நிலை ஏற்பட்டதாக விமானி அறிவித்தார். இதையடுத்து, விமானம் சியாட்டில் விமான நிலையத்திலேயே பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கும் முன்பே விமான நிலையத்தில் தீயனைப்பு துறையினர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர்.
விமானம் பத்திரமாக தரையிறங்கியதும், தீயனைப்புத் துறையினர் விமானத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, புகை வந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதை கண்டறிந்தனர். இதனை விமான நிலைய செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.