VIDEO: சுழலும் 57 மின்விசிறிகளை 1 நிமிடத்தில் நாக்கால் நிறுத்தி கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்
- தெலுங்கானாவின் சூர்யாபேட்டையைச் சேர்ந்தவர் கிராந்தி குமார் பணிகேரா டிரில்மேன்.
- இத்தாலியின் லோ ஷோ டீ ரெக்கார்ட் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமீபத்தில் இவர் பங்கேற்றார்.
சுழலும் 57 மின்விசிறிகளை நாக்கால் தடுத்து நிறுத்தி இந்தியாவை சேர்ந்த கிராந்தி ட்ரில்மேன் என்பவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
தெலுங்கானாவின் சூர்யாபேட்டையைச் சேர்ந்தவர் கிராந்தி குமார் பணிகேரா- டிரில்மேன். இத்தாலியின் லோ ஷோ டீ ரெக்கார்ட்[ Lo Show Dei Record] என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமீபத்தில் இவர் பங்கேற்றார்.
அதில் 57 ஓடும் மின் விசிறிகளை 1 நிமிடத்துக்குள் தனது நாக்கால் நிறுத்தியுள்ளார். தனது நாக்கை பயனப்டுத்தி அவர் மின் விசிறிகளின் சுழலும் பிளேடுகளை நிறுத்தும் வீடியோவை கின்னஸ் உலக சாதனைகள் (GWR) அமைப்பு அதன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
அவர் இந்த உலக சாதனையை படைக்கும்போது அந்த ஷோவில் இருந்த ஜட்ஜ்கள் உட்பட அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். எப்போதும் வித்தியாசமான செயல்கள் மூலம் மக்களை வியப்பில் ஆழ்த்தும் பணிகேரவின் இந்த சாதனை அவரை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளது. இதை பயிற்சி இல்லாதவர்கள் முயற்சிப்பது ஆபத்தில் முடியும்.