VIDEO: காதலியை கவர சிங்கத்தின் கூண்டுக்குள் சென்ற நபர் - குதறியெடுத்த சிங்கங்கள்
- சிம்பா என்று அழைத்து அவற்றை அவர் கொஞ்சுகிறார்.
- சிங்கங்களில் ஒன்று அவரைத் தாக்கத் தொடங்கியபோது நிலைமை மோசமடைந்தது.
உஸ்பெகிஸ்தானின் பார்க்கெண்டில் உள்ள தனியார் மிருகக்காட்சிசாலையில் மனிதனை சிங்கங்கள் குதறியெடுத்து கொன்ற சில்லிட வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
டிசம்பர் 17 அன்று நடந்த இந்த சம்பவத்தில் தாஷ்கண்ட் பிராந்தியத்தின் பார்க்கன்ட் மாவட்டத்தில் அமைந்துள்ள லயன் பூங்கா தனியார் மிருகக்காட்சிசாலையில் ஒரே கூண்டில் அடைக்கப்பட்ட மூன்று சிங்கங்களை விலங்கு காப்பாளர் [கீப்பர்] நெருங்கியுள்ளார்.
தன்னை வீடியோ பதிவு செய்வதற்காக 3 சிங்கங்கள் அடைத்து வைக்கப்பட்ட கூண்டுக்குள் நுழைந்துள்ளார். தனது காதலியை கவர அவர் சிங்கங்களுடன் வீடியோ எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
வீடியோவில், அந்த நபர் சிங்கங்களுக்கு அருகாமையில் இருப்பதைக் காணலாம். சிம்பா என்று அழைத்து அவற்றை அவர் கொஞ்சுகிறார். முதலில் ஆபத்தை உணராத அவர், அமைதியாகத் தோன்றினார்.
ஆனால் சிங்கங்களில் ஒன்று அவரைத் தாக்கத் தொடங்கியபோது நிலைமை மோசமடைந்தது. மற்ற சிங்கங்களும் அவரை சூழ்ந்து தாக்கத் தொடங்கியது பதிவாகி உள்ளது.காயங்களால் அவர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மிருகக்காட்சிசாலை காவலர்கள் பொதுவாக விலங்குகளை பாதுகாப்பாக கையாள பயிற்றுவிக்கப்படுகிறார்கள். ஆனால் அவற்றில் உள்ள ஆபத்துகளை இந்த சோகமான நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.