உலகம்
நமீபியாவின் முதல் பெண் அதிபராக நெடும்போ பதவியேற்பு

நமீபியாவின் முதல் பெண் அதிபராக நெடும்போ பதவியேற்பு

Published On 2025-03-24 03:45 IST   |   Update On 2025-03-24 03:45:00 IST
  • நெடும்போ நந்தி தைத்வா (வயது 72) 58 சதவீதம் வாக்குகள் பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
  • நிகழ்ச்சியில் தான்சானியா அதிபர் சாமியா சுலுஹூ ஹாசன் உள்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

விண்ட்ஹோயிக்:

ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் தென்மேற்கு ஆப்பிரிக்க மக்கள் அமைப்பு கட்சி சார்பில் போட்டியிட்ட நெடும்போ நந்தி தைத்வா (வயது 72) 58 சதவீதம் வாக்குகள் பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மாற்றத்திற்கான சுதந்திர தேசபக்தர்கள் கட்சி 26 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

இந்தநிலையில் தலைநகர் விண்ட்ஹோயிக்கில் உள்ள நாடாளுமன்றத்தில் அவரது பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது முன்னாள் அதிபர் நங்கோலா பும்பா அதிகாரத்தை அவரிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் தான்சானியா அதிபர் சாமியா சுலுஹூ ஹாசன் உள்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம் நாட்டின் முதல் பெண் அதிபர் மற்றும் ஆப்பிரிக்காவின் 2-வது பெண் அதிபர் என்ற பெருமையை நெடும்போ பெற்றுள்ளார்.

Tags:    

Similar News