உலகம்

இந்த வாரத்தில் மூன்றாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

Published On 2022-09-29 18:54 IST   |   Update On 2022-09-29 18:54:00 IST
  • அமெரிக்காவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஏவுகணை சோதனை நடத்தியது.
  • எந்த வகையான ஏவுகணையை வடகொரியா ஏவியது? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

சியோல்:

தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில், அணு ஆயுத வல்லமை பெற்ற அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல், கூட்டு ராணுவ பயிற்சிக்காக தென் கொரியாவுக்கு வந்தடைந்ததால் வடகொரியா மேலும் ஆத்திரமடைந்துள்ளது. எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஏவுகணை சோதனை நடத்தியது.

இந்நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தென் கொரியாவிற்கு வந்துவிட்டு, விமானம் மூலம் வீடு நாடு திரும்பிய பின்னர், இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த வாரத்தில் மட்டும் மூன்று முறை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

எந்த வகையான ஏவுகணையை வடகொரியா ஏவியது? எவ்வளவு தூரம் பறந்தது? என்பதை தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் உறுதிப்படுத்தவில்லை.

ஒரு ஏவுகணை செலுத்தப்பட்டதை கண்டுபிடித்ததாக ஜப்பான் ராணுவம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News