உலகம்

இங்கிலாந்தில் 200க்கும் மேற்பட்டோர் இந்து கோவிலை முற்றுகையிட்டு போராட்டம்

Published On 2022-09-21 07:27 GMT   |   Update On 2022-09-21 07:27 GMT
  • இந்து கோவில் மீதான தாக்குதலுக்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்தது.
  • துபாயில் நடந்த ஆசிய கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு பிரச்சினை ஏற்பட்டது.

இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் வசிக்கும் இந்து- முஸ்லீம் இடையே மோதல் ஏற்பட்டது. சமீபத்தில் துபாயில் நடந்த ஆசிய கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு பிரச்சினை ஏற்பட்டது.

அங்குள்ள இந்து கோவிலில் இருந்த கொடி கிழிக்கப்பட்டதால் வன்முறை உண்டானது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்து கோவில் மீதான தாக்குதலுக்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்தது.

இந்தநிலையில், இங்கிலாந்தில் வெஸ்ட் மிட்லாண்ட்சில் உள்ள ஸ்மெத்விக் நகரில் இந்து கோவிலை 200-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது சிலர் கோவில் சுவர்களில் ஏற முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News