Recap 2024

2024 ரீவைண்ட்: நோபல் பரிசு முதல் கிராமி விருதுகள் வரை.. மீள்பார்வை!

Published On 2024-12-22 11:10 GMT   |   Update On 2024-12-22 11:10 GMT
  • இலக்கியத்துக்கான நோபல் பரிசை 53 வயதான தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங் பெற்றார்.
  • டெய்லர் ஸ்விஃப்ட்டின் மிட்நைட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது

விருதுகள் & கௌரவங்கள்

முடிவுக்கு வரும் 2024 ஆம் ஆண்டு பல்வேறு சாதனைகளும், சமூகத்திற்கான பங்களிப்புகளும் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. உலக அளவில் பலரது கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் முக்கிய விருதுகள் கௌரவங்கள், அவற்றை பெற்றவர்களை மீண்டும் நினைவு கூறலாம்.

நோபல் பரிசுகள்:

இயற்பியல், வேதியியல், உடலியல் அல்லது மருத்துவம், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதார அறிவியல் ஆகிய துறைகளில் மனிதகுலத்திற்கு பங்களிப்பு செய்யும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆண்டு தோறும் உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி இந்த வருடத்தின் நோபல் பரிசுகள் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டன.

இலக்கியம் 

 இலக்கியத்துக்கான நோபல் பரிசை 53 வயதான தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங் பெற்றார். தென் கொரியாவில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் எழுத்தாளர் ஆவார். புனைகதை எழுத்தாளர் ஹான் காங் 2007 ஆம் ஆண்டு வெளியான ' தி வெஜிடேரியன்' [The Vegetarian] என்ற நாவல் மூலம் உலக அரங்கிற்குத் தெரியவந்தார்.

இந்த நாவலுக்காக இவருக்கு 2016 ஆம் ஆண்டில் 'மேன் புக்கர்' சர்வதேச பரிசு வழங்கப்பட்டது. ஆணாதிக்கம், துயரம், வன்முறை உள்ளிட்டவற்றைச் சுற்றி ஹான் காங் எழுத்துக்கள் உள்ளன.

 

1992 முதல் கவிதைகள் எழுதத் தொடங்கிய ஹான் காங் அதுமுதல் எண்ணற்ற படைப்புக்களை சமூகத்துக்கு வழங்கியுள்ளார். மக்களின் வலி, வரலாறுகள் ஏற்படுத்திய துயரம், இயலாமை ஆகியவை இவரின் படைப்புகளின் சாராம்சமாகும்.

அமைதி

இந்த வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசு, ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் தப்பிப்பிழைத்தவர்கள் நடத்தும் நிஹான் ஹிடான்கியோ அமைப்புக்கு வழங்கப்பட்டது.

அமெரிக்கா 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நாகசாகி நகரின் மீது அமெரிக்கா அணு குண்டுகளை வீசியது. இந்த இரண்டு தாக்குதலிலும் மொத்தமாக 200,000 மக்கள் உயிரிழந்தனர்.

அணுகுண்டுத் தாக்குதல்கள் ஏற்படுத்திய மரபணு பாதிப்புகள் இன்றுவரை அந்நகரின் மக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களின் உயிர்பிழைத்தவர்களின் சிலர் இணைந்து 1956 ஆம் ஆண்டில் தொடங்கிய நிஹான் ஹிடான்கியோ உலகம் முழுவதிலும் அணுகுண்டுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

 

அறிவியல் துறைகள் 

இந்த வருடத்தின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, சைமன் ஜான்சன், டாரன் அசோமோக்லு, ஜேம்ஸ் ராபின்சன் ஆகிய மூன்று வல்லுநர்களுக்கு இந்த வருடம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. நாடுகளின் செழுமைகளுக்கு இடையிலான வேறுபாடு குறித்த ஆய்வுக்காக இவர்களுக்கு இந்த விருதானது வழங்கப்படுகிறது.

இந்த வருடத்தின் வேதியியலுக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. கணக்கீட்டு புரத வடிவமைப்பு மற்றும் புரத அமைப்பு கணிப்பு ஆகியவற்றுக்காக இந்த ஆண்டு மூவருக்கு நோபல் விருது வழங்கப்படுகிறது.

கணக்கீட்டு புரத வடிவமைப்பு மற்றும் புரத அமைப்பு கணிப்பு ஆகியவற்றுக்காக இந்த ஆண்டு மூவருக்கு நோபல் விருது வழங்கப்படுகிறது.

மனித மூளையைப் போல இயங்க கணினிக்கு கற்றுத்தரும் மெஷின் லேர்னிங் கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்பீல்டு, இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு 2024-ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ RNA கண்டுபிடித்ததற்காகவும் டிரான்ஸ்கிரிப்ஷனுக்குப் பிறகு மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதற்காகவும் இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 கிராமி விருதுகள்: 

இசைத் துறையில் சிறந்த சாதனைகளுக்காக ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனபடி பிப்ரவரி 4, 2024 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Crypto அரங்கில் நடைபெற்ற 66வது வருடாந்திர கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆண்டின் சிறந்த ஆல்பமாக டெய்லர் ஸ்விஃப்ட்டின் மிட்நைட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு கிராமி விருது அளிக்கப்பட்டது.

 

ஆண்டின் சிறந்த பாடல் கிராமி விருதை பார்பி படத்தில் இடம்பெற்ற what was i made பாடலை உருவாக்கிய Billie Eilish O'Connell & Finneas O'Connell ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ரெகார்ட் ஆப் தி இயர் விருது மைலி சைரஸின் 'மலர்கள்' க்கு வழங்கப்பட்டது. ஆண்டின் சிறந்த பதிவு சிறந்த புதிமுக இசைக் கலைஞர் விருதை விக்டோரியா மோனெட் பெற்றார்.

புலிட்சர்:

புலிட்சர் பரிசுகள் 1917 முதல் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு வருகின்றன, இது பத்திரிகை மற்றும் கலைகளில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படுகிறது .

ஆண்டுதோறும் செய்தித்தாள், பத்திரிகை மற்றும் ஆன்லைன் பத்திரிகை உட்பட 23 வகைகளில் சிறந்த சாதனைகள் இதன்மூலம் அங்கீகரிக்கப்படுகிறது. அதன்படி இந்த வருடத்திற்கான புலிட்சர் விருது பொது சேவைக்காக ProPublica நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த தலையங்கதிற்காக வாஷிங்டன் போஸ்ட்டின் டேவிட் இ. ஹாஃப்மேன்விருது பெற்றார்.

 

உள்நாட்டுப் போர் காலத்தில் பாஸ்டனில் கறுப்பினத் தொழிலாளர்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து ஆழமான ஆய்வு செய்து அன்னே பிலிப்ஸ் எழுதிய நைட் வாட்ச் நாவல்-க்கு சிறந்த புனைகதை நாவலாக தேர்வானது.

கிங்: எ லைஃப் என்ற தலைப்பில் ஜொனாதன் ஈக் எழுதிய வாழ்க்கை சரிதை விருது பெற்றது. மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் வாழ்க்கை வரலாறு இது. 

Tags:    

Similar News