உலகம்

திவால் என அறிவிக்கக்கோரும் Tupperware

Published On 2024-09-18 13:12 IST   |   Update On 2024-09-18 13:12:00 IST
  • திவால் நடைமுறைக்கான ஆவணங்களை, இந்த வாரத்தில் டப்பர்வேர் நிறுவனம் தாக்கல் செய்யக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • கொரோனா பேரிடருக்கு பிறகு விற்பனையில் ஏற்பட்ட சரிவு, செலவினம் அதிகரிப்பு ஆகியவை முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

பள்ளிக்கூடம், அலுவலகத்திற்கு மதிய சாப்பாட்டைக் கொண்டு செல்லும் லஞ்ச்பேக் தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்த டப்பர்வேர் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ளதால் திவாலானதாக அறிவிக்கக்கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. திவால் நடைமுறைக்கான ஆவணங்களை, இந்த வாரத்தில் டப்பர்வேர் நிறுவனம் தாக்கல் செய்யக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பேரிடருக்கு பிறகு விற்பனையில் ஏற்பட்ட சரிவு, செலவினம் அதிகரிப்பு ஆகியவை முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில், 1946-ம் ஆண்டு எர்ல் டப்பர் என்பவரால் தொடங்கப்பட்ட டப்பர்வேர் நிறுவனம் தயாரித்த பொருட்கள், பெண் முகவர்களால் நேரடியாக உலகெங்கும் விற்பனை செய்யப்பட்டன. தற்போது, அவற்றின் தேவை குறைந்ததால், தொழிற்சாலையை மூடப்போவதாக கடந்த ஜூனில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Similar News