உலகம் (World)

ஐ.நா. அமைதிப்படை நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்.. 600 இந்திய வீரர்கள் நிலை குறித்து மத்திய அரசு அச்சம்

Published On 2024-10-11 14:24 GMT   |   Update On 2024-10-11 14:24 GMT
  • லெபனான் - இஸ்ரேல் எல்லையைப் பிரிக்கும் 120 கிலோமீட்டர் நீளமுள்ள புளூ லைன் அருகே அமைந்துள்ளது.
  • இன்று காலை ராணுவ பீரங்கிகள் நடத்திய தாக்குதலில் 2 அமைதிப்படை வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

லெபனானில் நிலை கொண்டுள்ள ஆகிய நாடுகள் சபையின் அமைதிப்படை மீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த அமைதிப் படையில் அங்கம் வகிக்கும் 600 இந்திய வீரர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து லெபனான் நகரங்களின் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமான லெபனானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை நாடான சிரியாவுக்குள்ளும், பாதுகாப்பான இடங்களை தேடியும் இடம்பெயந்து வருகின்றனர்.

இந்நிலையில் லெபனான் - இஸ்ரேல் எல்லையைப் பிரிக்கும் 120 கிலோமீட்டர் நீளமுள்ள புளூ லைன் அருகே எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நகோவுரா [Naqoura] நகரத்தில் அமைத்துள்ள ஐநா அமைதிப்படைகளின் [UNIFIL] தலைமையகம் மற்றும் அதை சுற்றிய நிலைகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இங்கு இன்று காலை ராணுவ பீரங்கிகள் நடத்திய தாக்குதலில் 2 அமைதிப்படை வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஐ.நா. நிலைகளை பாதுகாப்பு தடுப்பாக ஹிஸ்புல்லா பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

 

இதனைத்தொடர்ந்து இந்த தாக்குதல்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், புளூ லைன் பகுதியில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவது கவலையளிக்கிறது. ஐ.நா. [வளாகம் மீது தாக்குதல் நடத்தக்கூடாது] விதிகளை அனைவரும் மதிக்க வேண்டும்.

 

ஐ.நா. அமைதிப்படையின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அமைதிப்படையினருக்கு உயிராபத்து ஏற்பட்டுள்ளதாக ஐ.நா இந்த தாக்குதல்கள்  குறித்து தெரிவித்துள்ளது. காசா போர் தொடங்கியது முதல் ஐ.நா.வின் அறிவுரைகளை ஏற்காத இஸ்ரேல், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்ரஸ் தங்கள் நாட்டுக்குள் நுழையக்கூடாது என்று தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News