உலகம்

அப்துல்லா ஷாஹித்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவர் இன்று இந்தியா வருகை

Published On 2022-08-28 02:57 IST   |   Update On 2022-08-28 03:40:00 IST
  • ஐக்கிய நாடுகள் சபை தலைவராக இருந்து வருபவர் அப்துல்லா ஷாஹித்.
  • 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை தர உள்ளார்.

நியூயார்க்:

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவராக மாலத்தீவுகள் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாஹித் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அப்துல்லா ஷாஹித் 2 நாள் அரசுமுறை பயணமாக ஆகஸ்ட் 28 தேதி இந்தியா வருகை தர உள்ளார்.

இந்த வருகையின்போது ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா உள்பட பலரைச் சந்தித்து பேச உள்ளார்.

Tags:    

Similar News