உலகம்

குளிர்கால சங்கிராந்தி.. இன்று ஆண்டின் மிக குறுகிய நாள்

Published On 2024-12-21 11:30 GMT   |   Update On 2024-12-21 11:30 GMT
  • உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்த வான நிகழ்வை வெவ்வேறு வழிகளில் கொண்டாடுகிறார்கள்.
  • ஆண்டின் மிக நீண்ட இரவையும், குறைந்த பகல் நேரத்தையும் கொண்டு வருகிறது.

குளிர்கால சங்கிராந்தி எனப்படும் ஆண்டின் மிக குறுகிய நாளாக இன்றைய தினம் அமைந்துள்ளது.

வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்கள் சூரியனைச் சுற்றி வருவதால் நமது கிரகத்தின் சாய்வு காரணமாக ஆண்டு முழுவதும் வெவ்வேறு அளவு சூரிய ஒளியைப் பெறுகிறது. இது இரண்டு அரைக்கோளங்களின் பருவகால மாறுபாடுகளை வேறுபடுத்துகிறது.

கோடைக்காலத்தை அனுபவிக்கும் தெற்கு அரைக்கோளத்திற்கு மாறாக, வடக்கு அரைக்கோளம் குளிர்காலம் முழுவதும் சிறிய பகல் நேரத்தை அனுபவிக்கிறது.

குளிர்கால சங்கிராந்தியின் போது, வட துருவமானது சூரியனிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. இது ஆண்டின் மிக நீண்ட இரவையும், குறைந்த பகல் நேரத்தையும் கொண்டு வருகிறது.

இந்நிலையில், குளிர்கால சங்கிராந்தி எனப்படும் ஆண்டின் மிக குறுகிய நாளாக (குறுகிய பகல், நீண்ட இரவு) இன்றைய தினம் அமைந்துள்ளது.

பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் உள்ளவர்களுக்கு இன்று சற்று தாமதமாக உதித்த சூரியன், சீக்கிரமாகவே மறைந்து விடும்.

பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்படும் இந்த சங்கிராந்தி உலகம் முழுவதும் உள்ள பல பாரம்பரியங்களில் கலாச்சார, ஆன்மீக மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்த வான நிகழ்வை வெவ்வேறு வழிகளில் கொண்டாடுகிறார்கள்.

இந்திய நேரப்படி, குளிர்கால சங்கிராந்தி நேரம் பிற்பகல் 02.49 மணிக்கும், குளர்கால சங்கிராந்த சூரிய உதயம் காலை 7.10 மணிக்கும், குளிர்கால சூரிய அஸ்தமனம் மாலை 5.29 மணிக்கு எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News