உலகம்

மானேஜர், டைரக்டர், துணைத் தலைவர் என 10 சதவீத நிர்வாக பணியாளர்களை நீக்கிய கூகுள்

Published On 2024-12-21 12:21 GMT   |   Update On 2024-12-21 12:22 GMT
  • ஓபன்ஐ (OpneI) கூகுள் தேடுதலுக்கு (Google Search) கடும் அச்சுறுத்தலாக இருக்கும் என கணிப்பு.
  • செயல்திறனை அதிகரிக்கும் வகையில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூகுள் தகவல்.

கூகுள் நிறுவனத்தின் செயல்திறனை அதிகப்படுத்தும் நோக்கத்தில் டைரக்டர், துணைத் தலைவர் போன்ற நிர்வாக பணியாளர்கள் 10 சதவீதம் பேரை வேலையில் இருந்து கூகுள் நிர்வாகம் அதிரடியாக நீக்கியுள்ளது. அதன் செயல்திறனை இரட்டிப்பாக்கும் நீண்ட கால நோக்கத்தின் ஒருபகுதியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற உயர்மட்ட குழுவில் மானேஜர், டைரக்டர், துணைத் தலைவர் போன்ற பணியில் உள்ளவர்கள் நீக்கப்படலாம் என சூசகமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 10 சதவீதம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

சில பணியாளர்களின் பதவி குறைக்கப்பட்டு, தனிநபர் பங்களிப்பு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிலர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர் என கூகுள் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

கூகுள் நிறுவனம் இந்த வருடம் நான்காவது முறையாக ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் உலகளாவிய விளம்பரங்களுக்கான குழுவில் இருந்து சில நூறுபேரை நீக்கியிருந்தது. ஜூன் மாதம் மேலும் 100-க்கும் மேற்பட்டோரை நீக்கியிருந்தது.

2025 ஜனவரி மாதத்திற்குள் (அதாவது அடுத்த மாதம்) கூகுள் நிறுவனம் 12 பேரை வேலையில் இருந்து நிறுத்தியிருக்கும். இது உலகளவில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த பணியாளர்களில் 6.4 சதவீதம் ஆகும்.

உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் முன்னேறி வருவதாலும், ஓபன்ஏஐ (OpenAI) போன்ற போட்டி நிறுவனங்கள் கூகுள் தேடுதலுக்கு (Google Search) மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தலாக இருக்கும் என வல்லுனர்கள் எச்சரித்துள்ளதாலும் கூகுள் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கூகுள் தேடுதல் கடந்த வருடம் 57 சதவீதம் அதிகமாக வருமானம் ஈட்டியிருந்தது. இந்த வருமானம் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கூகுளின் பங்கு வால் ஸ்ட்ரீட்டில் ஏற்கனவே 3.5 சதவீதம் உயர்ந்த நிலையில், இந்த அறிவிப்புக்கு பிறகு 4 சதவீதத்திற்கு மேல் பங்குகள் மதிப்பு உயர்ந்துள்ளது.

எந்தவொரு நிறுவனமும் இதை கடந்த செல்வது கடினம். 25 வருடத்தில் கூகுள் நிறுவனம் இதுபோன்ற நடவடிக்கையை எடுத்தது கிடையாது. நாங்கள் இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால், இது மிகவம் கவலைக்குரியதாகும் என்பது தெளிவானது எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News