உலகம்
சூட்கேசை கடித்து ருசித்த இளம்பெண்... இறுதியில் காத்திருந்த டுவிஸ்ட்- வீடியோ
- இளம்பெண் சூட்கேசின் ஒரு முனைப்பகுதியை பிய்த்து சாப்பிட தொடங்குகிறார்.
- வீடியோவை இதுவரை 2½ கோடிக்கும் அதிகமான பயனர்கள் பார்த்து இளம்பெண்ணின் குறும்புத்தனத்தை ரசித்து வருகிறார்கள்.
சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ காட்டுத்தீப்போல பரவி வருகிறது. அதில் ஒரு இளம்பெண் விமான நிலையத்தில் தனது வெள்ளைநிற சூட்கேசுடன் சுற்றித்திரிகிறார்.
திடீரென விமான நிலையத்தில் உள்ள இருக்கையில் அமரும் அந்த இளம்பெண் சூட்கேசின் ஒரு முனைப்பகுதியை பிய்த்து சாப்பிட தொடங்குகிறார். இதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியில் திளைக்கிறார்கள்.
பின்னர் அந்த சூட்கேசை கொஞ்சம் கொஞ்சமாக அந்த இளம்பெண் பிய்த்து ருசித்து சாப்பிடுகிறார். அந்த இளம்பெண் சூட்கேஸ் வடிவிலான கேக்கை கடித்து சாப்பிட்டது வீடியோவின் இறுதியில் தெரிய வருகிறது.
இந்த வீடியோவை இதுவரை 2½ கோடிக்கும் அதிகமான பயனர்கள் பார்த்து இளம்பெண்ணின் குறும்புத்தனத்தை ரசித்து வருகிறார்கள்.