டெலிபோனில் பேச்சுவார்த்தை நடத்திய டொனால்டு டிரம்ப்- ஜி ஜின்பிங்
- அமெரிக்க அதிபராக வருகிற 20-ந்தேதி டிரம்ப் பதவி ஏற்க இருக்கிறார்.
- சீனாவின் துணை அதிபர், டொனால்டு டிரம்ப் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். குடியரசு கட்சில் சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 312 எலக்ட்டோரல் வாக்குகள் பெற்றார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் 222 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் இடம் பெறக் கூடிய பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகளை நியமித்தார் டிரம்ப். வருகிற 20-ந்தேதி 2-வது முறையாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில் டொனால்டு டிரம்ப்- சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் டெலிபோனில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இருவர்கள் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்கள் வெளியிடவில்லை. டொனால்டு டிரம்ப் 20-ந்தேதி பதவி ஏற்க இருக்கும் நிலையில், ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
டொனால்டு டிரம்ப் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க ஜி ஜின்பிங், துணை அதிபர் ஹசன் ஷெங்கை அனுப்பி வைத்துள்ளார். அமெரிக்க அதிபர் பதவி ஏற்கும் விழாவில் சீனாவைச் சேர்ந்த உயர் தலைவர் பங்கேற்க இருப்பது இதுவே முதல்முறையாகும்.